
ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புடின் அவர்களுடைய நேரடி உத்தரவின் பேரில் ரஷ்ய முப்படைகளும் மிகப்பெரிய போர் ஒத்திகையை மேற்கொண்டன.
ஜூலை 17 முதல் 21 வரை நடைபெற்ற இப்பயிற்சிகளில், ரஷ்ய தரைப்படையின் தெற்கு மற்றும் ராணுவ மாவட்டங்களின் வீரர்கள், வடக்கு மற்றும் பஸிஃபிக் பிராந்திய கடற்படை பிரிவுகள், மரைன் வீரர்கள் மற்றும் சில விமானப்படை படையணிகளும் பங்கேற்றன.
சுமார் 150000 வீரர்கள், 400 விமானங்கள் மற்றும் 100க்கும் அதிகமான கடற்படை கலன்கள் இப்போர் ஒத்திகையில் பங்கு பெற்றன. இந்த நான்கு நாட்களில் சுமார் 52 பயிற்சி பகுதிகளில் சுமார் 56 வகையான பலதரப்பட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுபற்றி பேசிய ரஷ்ய பாதுகாப்பு துளை இணை அமைச்சர் கர்னல் ஜெனரல் அலெக்சாண்டர் ஃபோமின் இந்த பயிற்சிகள் எந்த நாட்டையும் மனதில் வைத்து நடத்தப்படவில்லை, குறிப்பாக அர்மீனியா மற்றும் அஸர்பெய்ஜான் விவகாரத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றார்.