ரஷ்ய அரசுத்துறை ஊடகம் ஸ்வேஸ்தா கப்பல் கட்டும் தளத்தில் உலகின் மிகப்பெரிய அணுசக்தியால் இயங்கும் பனி உடைப்பான் கப்பலை கட்ட துவங்கி உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 70,000 டன்கள் எடை கொண்ட இந்த கப்பல் ரஷ்ய கடற்படையின் அட்மிரல் குஸ்நெட்ஸோவ் விமானந்தாங்கி கப்பலை விட பெரியதாகும். லீடர் என இந்த ரகத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கப்பலில் உலகின் சக்தி வாய்ந்த அணு உலைகளில் ஒன்று பொருத்தப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல்.
இந்த கட்டுமான பணியில் ஸ்வேஸ்தா மற்றும் ரோசாட்டம்ஃப்ளோட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற உள்ளன.
ஆர்ட்டிக் பகுதியில் நிலைநிறுத்தப்பட உள்ள இக்கப்பல் வருங்கால ரஷ்ய பனி உடைப்பான் கப்பல்களுக்கு முன்னோடியாக இருக்கும் என கூறப்படுகிறது.