
ட்விட்டரில் அமெரிக்க கடற்படை மற்றும் சீன அரசு ஆதரவு ஊடகம் மோதல் !!
சமீபத்தில் அமெரிக்கா தனது இரண்டு ராட்சத விமானந்தாங்கி கப்பல்களான யு.எஸ்.எஸ். ரோனால்ட் ரேகன், யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் மற்றும் அவற்றின் தாக்குதல் படையணிகளை தென்சீன கடல் பகுதிக்கு தனது பலத்தை காட்டும் வகையில் அனுப்பியது.
இதனையடுத்து சீன அரசு ஆதரவு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “சீனாவிடம் விமானந்தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளான DF21டி மற்றும் DF 26 ஆகியவை உள்ளதாகவும், ஒட்டுமொத்த தென்சீன கடல்பகுதியும் சீன கடற்படையின் கட்டுபாட்டில் உள்ளதாகவும், அமெரிக்க கடற்படை சீன கடற்படையின் அழுத்தத்தின் கீழ் உள்ளதாகவும்” ஒரு பதிவை வெளியிட்டது.
இதற்கு அமெரிக்க கடற்படை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளது. அந்த பதிவில் “ஆனாலும் இரண்டு அமெரிக்க கடற்படை விமானந்தாங்கி கப்பல்கள் மற்றும் அவற்றின் தாக்குதல் படையணிகள் தென் சீன கடலில் உள்ளதாகவும், எதற்கும் அசரவில்லை” எனவும் பதிலடி கொடுத்துள்ளது.
இதன்மூலம் உலகளாவிய ரீதியில் சீனா கடும் எதிர்ப்புகளை சந்திப்பது தெளிவாகிறது.