
அமெரிக்கா ரஷ்யா இடையே அணு ஆயுத கட்டுபாட்டு ஒப்பந்தம் ஒன்று செயல்பாட்டில் உள்ளது. இது வருகிற 2021ஆம் ஆண்டு ஃபெப்ரவரி மாதத்துடன் காலாவதி ஆகிறது.
ஆகவே இதை புதுப்பிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் சீனாவும் இணையுமாறு சில ஆண்டுகளாக அமெரிக்கா சீனாவுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.
இந்த நிலையில் புதன்கிழமை அன்று பெய்ஜிங் நகரில் செய்தியாளர்கள் இடையே சீன வெளியுறவு துறையின் ஆயுத கட்டுபாட்டு பிரிவு தலைவர் ஃபூ காங் பேசினார்.
அப்போது எங்களது அளவிற்கு அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை குறைத்தால் இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் நாங்கள் இணையலாம்.
ஆனால் தற்போதைய நிலையில் இந்த ஒப்பந்தத்தில் இணைய எங்களுக்கு எந்தவித ஆர்வமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.