தேசம் மறந்த மற்றுமொரு மாவீரனின் வெற்றிகதை லெப் கெய்ஷிங் கிளிப்போடு நொங்க்ரம்

  • Tamil Defense
  • July 5, 2020
  • Comments Off on தேசம் மறந்த மற்றுமொரு மாவீரனின் வெற்றிகதை லெப் கெய்ஷிங் கிளிப்போடு நொங்க்ரம்

தேசம் மறந்த மற்றுமொரு மாவீரனின் வெற்றிகதை.

ஜீலை 26,1999ல் இந்திய படைகள் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு மாபெரும் போரில் வெற்றியை ருசித்திருந்தது.அந்த கொடூரமான போரில் ஏரளமான இளம் வீரர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்தனர்.

வருடங்கள் கடந்துவிட்டன.தேசம் நினைக்க தவறிய மற்றுமொரு மாவீரனை பற்றிய வீர வரலாறு.

லெப்டினன்ட் கெய்ஷிங் கிளிப்போடு நொங்க்ரம் மற்றும் அவரது வீரதீர சாகசம் குறித்து காணலாம்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று மேகலாயா.அங்கு தான் அந்த வீரம் பிறந்தது.மார்ச் 7, 1975 லெப்டினன்ட் கெய்சிங் அவர்கள் பிறந்தார்.அப்பா பீட்டர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் பணிபுரிந்தார்.சிறுவயதிலேயே கெய்சிங் அவர்கள் துடிப்புடனும்,ஒழுக்கத்துடனும் வளர்ந்தார்.இசைப் பிரியர்.தனது பள்ளி கால்பந்து குழுவின் கேப்டன் அவர் தான். தினமும் கால்பந்து விளையாடி தனது உடலை திடத்துடன் வைந்திருந்தது அவர் இராணுவத்தில் இணைய உதவியது.

அரசியல் பற்றி பட்டம் பெற்ற பிறகு ஆபிசர் பயிற்சி அகாடமியில் 1996ல் இணைந்தார்.பயிற்சி முடிந்த பிறகு 12வது பட்டாலியன் ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரியில் இணைந்தார்.

கார்கில் போர் தொடங்கும் போது லெப்டினன்ட் கெய்சிங் அவர்களுக்கு வெறும் 24 வயது தான்.போரின் போது அவரது படைப் பிரிவு படாலிக் செக்டாரில் இருந்தது.

ஜீன் 30,1999 இரவு நேரம் லெப் கெய்சங் மற்றும் அவரது படைப்பிரிவிற்கு பாக் படைகள் கைப்பற்றிய அதிமுக்கியதுவம் வாய்ந்த பாய்ன்ட் 4812 என்ற மலைப் பகுதியை மீட்க கட்டளையிடப்பட்டது. பாய்ன்ட் 4812 என்ற மலைப் பகுதியை கைப்பற்ற வீரர்கள் குழு கிளம்பியது.செங்குத்தான மலைப்பகுதியில் மீதேறி அங்கு இருக்கும் பாக் பங்கர்களை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.மேலிருந்து கீழே உள்ள வீரர்கள் மீது பாக் வீரர்கள் சுடுவார்கள்.ஆனால் நமது லெப் கெய்சிங் யாரும் செய்யாததை செய்ய முன்வந்தார். அவரும் அவரது பிரிவும் மெதுவாக மலைமுகட்டில் ஏறி உச்சியில் அமைந்துள்ள பாக் பங்கரை தகர்க்க தயாரானார்கள்.

மலை உச்சியில் பாக் பங்கர்கள் அமைத்து பாறைகளை அரணாக அமைத்து நன்கு பாதுகாப்பாக இருந்தனர். தொலைவில் இருந்து மட்டும் துப்பாக்கிச்சூடு நடத்தி இந்த பாறையை மற்றும் பங்கரை அகற்றுவது முடியாத காரியம்.ஆர்டில்லரிகளை கொண்டு தொடர்ச்சியாக நமது வீரர்களை தாக்கி கொண்டும்,இயந்திரத் துப்பாக்கி மூலம் தொடர்ச்சியாக சுட்டுக் கொண்டும் இருந்தனர் பாக் வீரர்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பாக் நமது வீரர்கள் மீது தொடர்சியாக தாக்கும் போது லெப் கெய்சிங் தனது வீரர்களை காக்க ஒரு முடிவுக்கு வந்தார். பாக் துப்பாக்கியால் சுடும பங்கரை நோக்கி வேகமாக தாக்கி கொண்டே ஓடினார்.ஒரு கிரேனைடை எடுத்து பாக் பங்கரில் மேல் வீசினார்.ஆறு பாக் வீரர்கள் பலியானார்கள்.அதே நேரத்தில் லெப் கெய்சிங் பல தோட்டாக்களை தனது உடம்பில் வாங்கியிருந்தார்.

படுகாயம் அடைந்தாலும் அவர் எதிரிகளை விடுவதாய் இல்லை.லெப் கெய்சிங் தன் கைகளால் எதிரியின் இயந்திரத் துப்பாக்கியை பறிக்க அங்கு இருந்த பாக் வீரருடன் தன் கைகளால் வீழ்த்தினார்.அவர் ஒரு பாக்சர் கூட!!!! ..அவரை காப்பாற்றி மருத்துவ உதவிகள் வழங்க வீரர்கள் அவரை அழைத்த போதும் மறுத்து தனது இறுதி மூச்சு வரை தன் வீரர்களுடன் இணைந்து சண்டையிட்டார்.உடம்பில் அதிகப்படியான இரத்தம் வெளியேறியது.போர்க்களத்தில் தன் சகாக்களுடேயே வீரமரணம் அடைந்தார்.பங்கள் மற்றும் அந்த மலை இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்தது.

இந்த மாவீரனுக்கு ஒரு வீரணக்கம்.

போரில் செய்த வீரதீர சாகசம் காரணமாக மகாவீர் சக்ரா விருது வழங்கி பெருமை கொண்டது இந்தியா…