நாட்டின் ஒருங்கிணைப்பை சீர்குலைக்க முயன்றவர்கள் இனி கவலை கொள்வர்-பாதுகாப்பு துறை அமைச்சர்

ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ள இந்த நேரத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.நாட்டின் ஒருங்கிணைப்பு தன்மையை குலைக்க முயன்றவர்கள் இனி கவலை கொள்ள வேண்டும் என அவர் பேசியுள்ளார்.

குறிப்பிட்டு அவர் எந்த நாட்டையும் பேசவில்லையெனினும் தற்போது நடக்கும் பிரச்சனை மூலம் அது சீனாவுக்கு எதிராக விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்.

சரியான நேரத்தில் விமானப்படைக்கு இந்த ரபேல் விமானங்கள் பலத்தை அளித்துள்ளன எனவும் அவர் பேசியுள்ளார்.இந்த விமானங்கள் விமானப்படையின் செயல்படு திறனில் புரட்சியை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.