
சுமார் 13 ஆண்டு கால காத்திருப்புக்கு பின்னர் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வரவுள்ளன.
கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்திறன் போர் விமான ஒப்பந்தத்தில் ரஃபேல் விமானம் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே பல சிக்கல்கள் உருவாகின.
விலை நிர்ணயம், அதிக விலை போன்ற காரணங்களால் இந்த ஒப்பந்தம் விமர்சனத்திற்கு ஆளானது.
மேலும் கொரோனாவால் டெலிவரியில் தாமதம், ஒரு வழியாக இந்தியா நோக்கி புறப்பட்ட பின்னர், நேற்று அல் தாஃப்ரா தளம் அருகே ஈரானிய தாக்குதல் என பிரச்சினை.
தற்போது அம்பாலா பகுதியில் வானிலை பிரச்சினை காரணமாக ஜோத்பூர் படைதளம் ரஃபேல் விமானங்களை வரவேற்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 11 மணி அல்லது அதற்கு பிறகு அல் தாஃப்ரா தளத்தில் இருந்து புறப்படும் ரஃபேல் விமானங்கள் மாலை 3 மணியளவில் தாயகம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஃபேல் விமானங்களின் வரவு நீண்ட கால காத்திருப்புக்கு முற்று புள்ளி வைக்கவுள்ளது, அந்த தருணத்தை இந்திய பாதுகாப்பு வல்லுனர்கள் மற்றும் பார்வையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.