மிக நீண்ட கால வலியுறுத்தல்களுக்கம், முயற்சிகளுக்கும் பின்னர் இந்திய விமானப்படைக்கு ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து முதல் கட்டமாக சுமார் 5 ரஃபேல் போர் விமானங்கள் நாளை காலை ஃபிரெஞ்சு விமானப்படையின் இஸ்ட்ரெஸ் தளத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட உள்ளன.
29 ஆம் தேதி ரஃபேல் விமானங்கள் ஹரியானா மாநிலத்தில் உள்ள இந்திய விமானப்படையின் அம்பாலா படை தளத்தில் வந்து சேரும், இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் இடைநிறுத்தம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 போர் விமானங்களில் 3 இரட்டை இருக்கை விமானங்களும், 2 ஒற்றை இருக்கை விமானங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.