ரபேல் பலபணி போர் விமானம் எப்படி? புகைப்படத்துடன் விளக்கம்

  • Tamil Defense
  • July 11, 2020
  • Comments Off on ரபேல் பலபணி போர் விமானம் எப்படி? புகைப்படத்துடன் விளக்கம்

1) வான் ஆதிக்கம்

படத்தில் 3 பெரிய ஏவுகணைகள் போல தெரிகிறதா!! அவை ஏவுகணைகள் அல்ல ! அவை வெளிப்புற எரிபொருள் டேங்குகள்.ஆம் வானாத்திக்கம் என்று வரும் போது விமானத்தில் மட்டுமே எரிபொருள் நிரப்பாமல் இது போல வெளிப்புற எரிபொருள் டேங்க் உபயோகிக்கப்படும்.விமானங்கள் கூடுதலாக சில நேரங்கள் வானத்தில் பறக்க இது உதவும்.வான் ஆதிக்கம் என்றால் ரபேல் வானத்தில் பறக்கும் போது மற்ற எதிரி நாட்டு விமானங்கள் நம் எல்லைக்குள் வராது.அப்படி வந்தால் அவற்றை விரட்ட மேலும் எதிரிபொருள் தேவை என்பதால் இந்த External Fuel Tanks தேவைப்படுகிறது.எரிபொருள் தீர்ந்த உடன் இதை விமானத்தில் இருந்து கழற்றி விட முடியும்.இவற்றை drop tanks என்றும் கூறுவர்.

சரி எதிரி விமானம் நமது எல்லைக்குள் வந்து விட்டது.அதை ரபேல் அடித்து வீழ்த்த வேண்டுமே…! அதற்கு தான் இந்த மைக்கா . MICA EM என்ற இந்த வான்-வான் ஏவுகணை எதிரி விமானங்களையோ அல்லது எந்த வான் இலக்குகளையும் துல்லியமாக வீழ்த்த வல்லது.

இதற்காக பத்து மைக்கா ஏவுகணைகளை ரபேல் சுமக்கும்.500மீ முதல் 80கிமீ வரை வரும் இலக்குகளை அழிக்க வல்லது. MICA EM ஏவுகணை தனது வழிகாட்டுதலுக்காக Active Radar homing என்ற தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது.

2) போர்க்கப்பல் எதிர்ப்பு நடவடிக்கை

போர்க்கப்பல்கள் கடற்தரை இலக்குகள்.அவற்றை அழிக்க ரபேல் வேறு மாதிரியான ஆயுதங்களை சுமந்து செல்வது அவசியம்.மேலும் கடற்பரப்பு என்பதால் கடலுக்குள் செல்ல வேண்டும்.

அதற்காக இந்த ஆபரேசனுக்கு செல்லும் ரபேல் விமானங்கள் இரு 1250லி எரிபொருள் வெளிப்புற டேங்குகளை சுமந்து செல்லும்.

தவிர AM 39 Exocet anti-ship ஏவுகணையை சுமந்து செல்லும்.

போர்க்கப்பல்களை மிகத் துல்லியமாக தாக்க வல்ல இந்த ஏவுகணைகளை தான் நமது ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகளும் பயன்படுத்துகின்றன.ரபேலில் வைத்து ஏவக்கூடிய ரகம் இந்தியாவிடம் தற்போது இல்லை.கடற்படை வகை நாம் உபயோகிக்கும் பட்சத்தில் இவற்றை பெற்றுக்கொள்ள முடியும்

அந்த சமயம் எதிரி விமானங்கள் தாக்க வந்தால் அவற்றை வீழ்த்த MICA EM மற்றும் MICA IR தேவைப்படும் அளவு கொண்டு செல்லும்.

3) Close Air Support 1

தரைப்படைகளுக்கு அல்லது எதிரிபடையோடு நாம் படைகள் மோதும் போது நமது படைக்கு Close Air Support வழங்குவது.இது மிக ஆபத்தான ஆனால் மிக முக்கயமானது.எதிரி படைகளும் நம் படைகளும் மோதும் போது ஏவுகணைகள் செலுத்தினால் நம் படைகளும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.எனவே இந்த முறையில் விமானம் பறந்து சென்று எதிரியை தாக்க அதிக கவனம் மற்றும் போர்க்களம் குறித்த தகவல் தேவை.

இது போன்ற மிசன்களுக்கென ரபேல் பிரத்யேக ஆயுதங்களை பெற்றுள்ளது.

மூன்று 1250லி வெளிஎரிபொருள் டேங்குகள்.தவிர 6 GBU-12 குண்டுகள்,1 Damocles Targeting Pod , மற்றும் வான் இலக்குகளை தாக்க மைக்கா ஏவுகணைகள்.இந்த டார்கெட்டிங் பேடு உதவியுடன் தான் இரபேல் ஐியுபி குண்டுகளை இலக்கின் மீது துல்லியமாக வீசும்.இந்த GBU-12 15கிமீ உள்ள இலக்குகளை அழிக்கும்.

4) Close Air Support 2

இந்த ஆயுதங்களும் Close Air Support க்காக தான்.உண்மையான களத்தை பொறுத்து இந்த ஆயுதங்களை நாம் தேர்ந்தெடுக்கலாம்.

மூன்று 1250லி வெளிஎரிபொருள் டேங்குகள்.தவிர 3 GBU-10 குண்டுகள்,1 Damocles Targeting Pod , மற்றும் வான் இலக்குகளை தாக்க மைக்கா ஏவுகணைகள்.இந்த மிசனுக்காக 3 குண்டுகளை சுமந்து செல்லும்.

5) Close Air Support 3

இதுவும் Close Air Support மிசன் தான்.ஆனால் இதில் 2000லி வெளிப்பகுதி எரிபொருள் டேங்க் இருக்கும்.

மேலும் ஆறு SBU குண்டுகள் மற்றும் தேவைக்கு ஏற்றாற் போல மைக்கா கொண்டு செல்லலாம்.

6) Standoff strike

பாதுகாப்பான இடத்தில் இருந்தவாறே எதிரி இலக்கை தாக்கி அழிப்பது.இதற்கு உங்களுக்கு நீண்ட தூரம் செல்லும் ஆயுதங்கள் தேவை.

இதற்காக 2000லி வெளிப்பகுதி எரிபொருள் டேங்க் இருக்கும்.மேலும் இரு ஸ்கல்ப் ஏவுகணை இருக்கும்.கிட்டத்தட்ட 500கிமீக்கும் மேல் செல்லக்கூடியது.

மற்றும் தற்காப்பிற்காக நான்கு மைக்கா ஏவுகணைகள் கொண்டு செல்லலாம்.

ரபேல் மூலம் அணு ஏவுகணைகளையும் ஏவ முடியும்.இது பிரான்சினுடைய ASMP ஆகும்.

இது கண்டிப்பாக ஏற்றுமதிக்கு இல்லை