எல்லைக்கு அனுப்பப்படும் ரபேல் விமானங்கள்??

  • Tamil Defense
  • July 19, 2020
  • Comments Off on எல்லைக்கு அனுப்பப்படும் ரபேல் விமானங்கள்??

இந்தியா புதிதாக வாங்கியுள்ள ரபேல் விமானங்கள் எல்லைக்கு அனுப்பப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.எல்லையில் சீன இராணுவத்தை பின்வாங்கச் செய்வது மிக சவாலான பணியாக உள்ளது.என்னவேன்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழ்நிலை நீடித்து வருவதால் தற்போது இந்தியா தனது பலத்தை லடாக்கில் பெருக்கி வருகிறது.

இந்தியாவின் கோரிக்கைப்படி பிரான்ஸ் ரபேல் விமான டெலிவரியின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.வரும் ஜீலை 27 நான்கு விமானங்கள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் தற்போது 6 விமானங்கள் இந்தியாவின் அம்பாலா தளம் வரவுள்ளது.

கடந்த ஒரு வருடமாக ரபேல் தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் வான் மற்றும் தரைக்குழு வீரர்கள் முடித்து தற்போது எதற்கும் தயாராகவே உள்ளனர்.

விமானப்படை முடிந்தவரை இந்த ரபேல் விமானங்களை ஆபரேசன்களில் இணைக்க பார்த்து வருகிறது.லடாக் உள்ளிட்டு எங்கு அதிக தேவையாக உள்ளதோ அங்கு நிலைநிறுத்த அனைத்து வேலைப்பாடுகளும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிக உயரமான பகுதியில் செயல்படும் அளவுக்கு இந்தியாவின் ரபேல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.குளிரில் கூட அதன் என்ஜினை மிக விரைவாக இயக்க முடியும்.