எப்போதும் தயாராக இருங்கள் விமானப்படை தளபதிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை !!
1 min read

எப்போதும் தயாராக இருங்கள் விமானப்படை தளபதிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை !!

புதன்கிழமை தொடங்கிய விமானப்படை தளபதிகளின் வருடாந்திர சந்திப்பு கூட்டத்தை தொடங்கி வைத்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

அப்போது இந்திய விமானப்படை லடாக் பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும்,

போக்குவரத்து விமானங்கள் மூலமாக படை வீரர்களை எல்லைக்கு விரைவாக நகர்த்தியதாகட்டும், போர் விமானங்களை அனுப்பி பாதுகாப்பை பலப்படுத்தியதாகட்டும் பாராட்டுக்கு உரிய செயல்பாடுகளாகும் என பாராட்டினார்.

பின்னர் இந்திய முப்படைகளும் எதற்கும் தயாராக வேண்டும் எனவும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக பதிலடி கொடுக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.