
பிரம்மோஸ் ஏவுகணையை இந்தோனேசியாவிற்கு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவும் சீனாவுடன் கடற்சார் பிரச்சனையை கொண்டுள்ளது.இந்தியா மற்றும் இந்தோனேசியா இருநாட்டு இராணுவ உறவுகளை வலுப்படுத்த முடிவு செய்துள்ளன.
தற்போது இந்தோனேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியான்டோ அவர்கள் இந்தியா வந்துள்ளார்.மேலும் அவர் இன்று இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி தொடர்பாக இரு நாடுகளும் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.