
சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதி நக்ஸல்கள் ஆதிக்கம் அதிகம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் பல வருட காலமாக மாநில காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் இணைந்த நகஸல்கள் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வப்போது இங்கு பாதுகாப்பு படையினர் மீது மிக கொடுரமான தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் ஒருமுறை 70க்கும் அதிகமான மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்கள் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
தற்போது புதிதாக பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினரை குறிவைக்கும் போக்கு முளைத்துள்ளது.
நேற்று இரவு தாண்டேவாடா மாவட்டத்தில் உள்ள குமியாபுல் கிராமத்தை சார்ந்த காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு பிரிவின் காவலர் அஜய் தேலம் அவர்களின் வீட்டுக்குள் புகுந்த நக்ஸலைட்டுகள் அவரது தந்தை லச்சு தேலம் மற்றும் தாயார் விஜ்ஜோ தேலம் ஆகியோரை கடத்தியது மட்டுமின்றி அவரது சகோதரியை தாக்கிவிட்டு மொபைலை பறித்து சென்றுள்ளனர் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா கூறினார்.
இந்த நிகழ்வு நடந்த போது அஜய் தேலம் தனது படையணியுடன் முகாமில் இருந்துள்ளார்.
காவல்துறை நக்ஸலைட்டுகளை சமுதாயத்தில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது இலன் பயனாக பல நக்ஸலைட்டுகள் சரணடைய முயற்சி செய்து வருகின்றனர் இநனால் ஆத்திரமடைந்த நக்ஸலைட்டுகள் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.