கடலோர பாதுகாப்புக்கு இஸ்ரேலின் ஷால்டாக் அதிவேக ரோந்து படகுகளை வாங்கும் ஃபிலிப்பைன்ஸ் !!!

  • Tamil Defense
  • July 14, 2020
  • Comments Off on கடலோர பாதுகாப்புக்கு இஸ்ரேலின் ஷால்டாக் அதிவேக ரோந்து படகுகளை வாங்கும் ஃபிலிப்பைன்ஸ் !!!

ஃபிலிப்பைன்ஸ் அரசு இஸ்ரேலிடம் இருந்து 8 ஷால்டாக் அதிவேக ரோந்து படகுகளை (Shaldag class fast patrol boat ) வாங்க முடிவு செய்துள்ளது.

இந்த படகுகளில் நான்கு இஸ்ரேலிலும், நான்கு ஃபிலிப்பைன்ஸிலும் கட்டப்பட உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 203மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இந்த படகுகளில் 14 வீரர்கள் பயணிக்க முடியும், 1 டைஃபூன் தானியங்கி துப்பாக்கி, 2 மினி டைஃபூன் கனரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 8 குறுந்தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவை இருக்கும்.

இந்த ஷால்டாக் படகுகள் இடைமறித்தல், ரோந்து, கண்காணிப்பு, கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மிக சிறந்தவை ஆகும், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் இவை பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.