பிரம்மாஸ் ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கும் இந்தியா – ஃபிலிப்பைன்ஸ் பேச்சுவார்த்தை !!
1 min read

பிரம்மாஸ் ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கும் இந்தியா – ஃபிலிப்பைன்ஸ் பேச்சுவார்த்தை !!

தென்சீன கடல்பகுதியில் நாளுக்கு நாள் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
சீன கடற்படை பல நாடுகளுக்கு பிரச்சினை கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் சீன கடற்படையை சமாளிக்க அப்பிராந்திய நாடுகள் நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் என புதிய ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை வாங்கி குவித்து வருகின்றன.

அந்த வகையில் ஃபிலிப்பைன்ஸ் கடந்த சில ஆண்டுகளாகவே பிரம்மாஸ் ஏவுகணையில் அதீத ஆர்வம் காட்டி வந்தது.

இந்த நிலையில் கடலோர பாதுகாப்புக்கு லாரியில் இருந்து ஏவப்படும் வகையிலான பிரம்மாஸ் ஏவுகணைகளின் விலை நிர்ணய பேச்சுவார்த்தை கட்டத்தை இரு நாடுகளும் தாண்டி விட்டன.

தற்போது இது தொடர்பான வேறு சில நடைமுறைகளை பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இந்த வருடத்தின் மூன்றாவது கட்டத்திற்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

கடலோர பாதுகாப்புக்கு 290 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பு கொண்ட பிரம்மாஸ் ஏவுகணையை ஃபிலிப்பைன்ஸ் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை தவிர ஃபிலிப்பைன்ஸ் அரசு தனது கடற்படையின் முன்னனி போர் கப்பல்களில் பிரம்மாஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை பொருத்த விரும்புகிறது என்பது கூடுதல் தகவல்.