
ஃபிலிப்பைன்ஸ் அரசு அமெரிக்காவிடம் இருந்து 2 புதுப்பிக்கப்பட்ட சி130 ஹெச் ரக விமானங்களை பெற உள்ளதாக அறிவித்து உள்ளது.
முதல் விமானம் ஜூலை இறுதியிலும், இரண்டாவது விமானம் இந்த வருட இறுதியிலும் வரும் என கூறப்படுகிறது.
இந்த திட்டம் ஃபிலிப்பைன்ஸ் விமினப்படையை நவீனப்படுத்துதல் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும், மேலும் இத்திட்டம் அமெரிக்க அரசிடம் இருந்தும் நிதியை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா இதில் 17.30 மில்லியன் டாலர்களையும் ஃபிலிப்பைன்ஸ் அரசு 30.76 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் இந்த திட்டத்திற்கு செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு விமானங்களும் அமெரிக்க விமானபாபடையில் இருந்து ஒய்வு பெற்ற விமானங்கள் ஆகும், ஆனால் ஃபிலிப்பைன்ஸ் விமானப்படையின் தேவையை கருத்தில் கொண்டு இவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.
ஃபிலிப்பைன்ஸ் விமானப்படையில் 7 சி130 விமானங்கள் இருக்கும் என்பது கூடுதல் தகவல்.