
இராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர பணி வழங்க பாதுகாப்பு துறை அமைச்சகம் ஆர்டர் வெளியிட்டுள்ளது.
ஷார்ட் செர்விஸ் கமிசன் வழியாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர கமிசன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இராணுவத்தில் பெரிய பங்களிப்பை பெண் வீரர்கள் செய்ய இது வழிவகுக்கும் என இராணுவ செய்தி தொடர்பாளர் கலோனல் அமன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இராணுவ வான் பாதுகாப்பு பிரிவு,சிக்னல்ஸ்,இன்ஜினியர்ஸ்,இராணுவ வான்பிரிவு,எலக்ட்ரானிக் மற்றும் மெகானிகல் என்ஜினியர்ஸ் ,இராணுவ சேவை பிரிவு மற்றும் உளவுதுறை ஆகிய துறைகளில் உள்ள பெண் வீரர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
தற்போது இராணுவத்தின் நீதிப்பிரிவு மற்றும் கல்வி ஆகிய பிரிவுகளில் உள்ள பெண் அதிகாரிகள் மட்டுமே நிரந்த பணியிடம் பெற்றிருந்தனர்.எஸ்எஸ்சி வழியாக முன்பு தேர்வு செய்யப்படும் பெண் வீரர்கள் 14 வருடங்கள் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.தற்போது ஓய்வு பெறும் வரை பணிசெய்யலாம்.