
லண்டன் நகரில் உள்ள சீன தூதரகத்திற்கு வெளியே இந்தியர்கள் சீனாவின் மண்ணாசைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
அப்போராட்டத்தில் பாகிஸ்தானியர்களும் ஈரானியர்களும் கலந்து கொண்டு தங்களது நாடுகளில் சீனா அதிகம் மூக்கை நுழைப்பதாக கூறி சீன எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பாகிஸ்தானியர்கள் இந்தியர்களுடன் இணைந்து வந்தே மாதரம் பாடலை பாடியது தான்.
இது குறித்து பேசிய பாகிஸ்தானியர் ஆரீஃப் ஆஜாக்கியா தனது வாழ்க்கையில் முதல் முறையாக வந்தே மாதரம் பாடலை பாடியதாக தெரிவித்தார்.
இது மட்டுமின்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பூர்வீகமாக கொண்டவர்களும் இந்த போராட்டத்தில் பங்கு பெற்றனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த அம்ஜாத் அயூப் மிர்சா பேசுகையில் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்புர் நகரை சேர்ந்தவர் எனவும் பாகிஸ்தானுடைய ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் இந்தியர் எனவும் தெரிவித்தார்,
மேலும் க்ளாஸ்கோவ் நகரில் வசிக்கும் தான் இந்த போராட்டம் குறித்து கேள்விப்பட்டு இதில் கலந்து கொள்ள லண்டன் வந்ததாகவும் கூறினார்.