ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் : இந்தியா !!

இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவாஸ்தவா சமீபத்தில் செய்தியாளர்களை தில்லியில் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள கில்ஜீத் பல்டிஸ்தான் பகுதியில் தேர்தல்களை நடத்த முற்படுவதும் அப்பகுதியில் ராணுவத்தை குவிப்பதும் தவறான செயல்பாடுகள் ஆகும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜீத் பல்டிஸ்தான் போன்ற பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள பாகிஸ்தான் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றார்.

மேலும் பேசுகையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் 50% ஊழியர்கள் நாடு திரும்பி விட்டதாகவும் அதை போல பாகிஸ்தானியராகளும் தங்களது நாட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறினார்.