லடாக் பகுதிக்கு 20000 வீரர்களை அனுப்பும் பாகிஸ்தான் இராணுவம்,பயங்கரவாத குழுவுடன் சீனா பேச்சுவார்த்தை

  • Tamil Defense
  • July 1, 2020
  • Comments Off on லடாக் பகுதிக்கு 20000 வீரர்களை அனுப்பும் பாகிஸ்தான் இராணுவம்,பயங்கரவாத குழுவுடன் சீனா பேச்சுவார்த்தை

லடாக் பகுதியில் பதற்றத்தை குறைக்க இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளையில் பாக்கிஸ்தான் இராணுவம் தனது படைப்பிரிவுகளை கில்ஜீத்-பல்டிஸ்தான் பகுதிக்கு அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது தவிர சீன இராணுவம் பாக் பயங்கரவாத இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லடாக்கின் வடக்கு பகுதிக்கு கிட்டத்தட்ட 20000 வீரர்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட சீனா அங்கு நிலைநிறுத்தியுள்ள படைக்கு இணையானதாக இந்த படைகுவிப்பு உள்ளது.இந்திய இராணுவமும் இந்திய உளவு அமைப்பும் இந்த புதிய பிரச்சனை குறித்து தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

சீன வலியுறுத்தலின் படி பாக்கின் ஐஎஸ்ஐ அமைப்பு இந்திய எல்லையில் பேட் படை உதவியுடன் பயங்கரவாத தாக்குதலை அதிகரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே காஷ்மீரில் இருக்கும் 100 பயங்கரவாதிகள் உதவியுடன் பெரிய தாக்குதல்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.