
பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுடனான எல்லை பகுதியில் பல சிறியரக ஆளில்லா வாகனங்களை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாகனங்கள் ரஷ்யாவில் “ப்ளாட்ஃபார்ம் எம்” என்ற உளவு வாகனத்தை போன்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வகை வாகனங்களில் க்ரனேட் லாஞ்சர்கள், ஏகே47, ஆர்.பி.ஜி, 7.62 எல்.எம்.ஜி ஆகியவற்றை இணைத்து பயன்படுத்தி கொள்ள முடியும்.
மேலும் களத்தில் இவை கண்காணிப்பு, தாக்குதல் உதவி, ரோந்து, தாக்குதல் போன்ற பணிகளில் ஈடுபடும். அதிகபட்சமாக 25கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இதன் கட்டுபாட்டு எல்லை 16கிலோமீட்டர்கள் ஆகும்.