பாக் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு-காஷ்மீரில் சோகம்

காஷ்மிரீல் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாக் இராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர.

வெள்ளி அன்று இரவு 11 மணி அளவில் பாக் படைகள் கடும் தாக்குதலை தொடங்கியுள்ளன.சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் ஷெல்களை கொண்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தின.
குலபுர் செக்டாரில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதில் முகமது ரபீக் ,அவரது மகன் மற்றும் மனைவி என இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

சண்டை தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்திய தரப்பில் இருந்து கடுமையான பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன