பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையை சேர்ந்த ஆஷிக் எனும் அதிகாரியை கராச்சி நகரில் சிந்து தேச புரட்சி ராணுவம் வீழ்த்தியுள்ளது.
வீழ்த்தப்பட்ட ரேஞ்சர்ஸ் அதிகாரி ஆஷிக் சிந்து தேச விடுதலை போராளிகளை பற்றி தகவல் திரட்டும் பணியிலும், பல சிந்து தேச போராளிகளை கொடுரமாக வீழ்த்தியதிலும் பங்கு வகித்தவர் ஆவார்.
இதுகுறித்து சிந்து தேச புரட்சி படையின் செய்தி தொடர்பாளர் சோதோ சிந்தி கூறுகையில் ” சிந்து தேச விடுதலைக்கு எதிராகவும் சிந்து மக்களின் இன அழிப்புக்கு காரணமானவர்களையும் சிந்து தேச புரட்சி படை வீழ்த்தும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில் பாகிஸ்தான் படையினர் சிந்து தேச விடுதலை போராளிகளை மிக கொடுரமாக வீழ்த்தி வருவதாகவும் , சிந்து மக்களின் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை துன்பப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
சிந்து தேசத்திற்கு சொந்தமான சிந்து நதி,கராச்சி நகரம், அதை ஒட்டிய கடலோர பகுதிகளை பாகிஸ்தான் பஞ்சாப் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இதற்கு சீனா உடந்தை எனவும் கூறியுள்ளார்.