பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே சிறந்த புரிதல் உள்ளது பாக் வெளியுறவு அமைச்சர் !!

  • Tamil Defense
  • July 6, 2020
  • Comments Off on பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே சிறந்த புரிதல் உள்ளது பாக் வெளியுறவு அமைச்சர் !!

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி சமீபத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அவர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே நல்ல புரிதல் இருப்பதாகவும், இரு நாடுகளும் ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் குரேஷி வாங் இடம் கூறியதாகவும்,

மேலும் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எந்த சூழலிலும் இணை பிரியாத நட்பு நாடுகள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் சீன அரசின் ஒரே சீனா திட்டத்திற்கு பாகிஸ்தான் முழு ஆதரவு அளிப்பதாகவும், ஹாங்காங், தைவான் மற்றும் ஸின்ஜியாங் பகுதிகளில் சீனாவின் நிலைபாட்டை ஆதரிப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.