
காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் நாக்நாட்-சிம்மர பகுதியில் தற்போது நடைபெற்று வரும் சண்டையில் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டுள்ளான்.
சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காஷ்மீர் காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
காஷ்மீர் காவல் துறையின் சிறப்பு அதிரடி படை,சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் 9வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு ஆகியவை இணைந்து உளவுத் தகவல்கள் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திக்கொண்டிருந்த போது வீரர்கள் நோக்கி பயங்கரவாதிகள் சுட்டுள்ளனர்.
சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.