AK-47 குண்டுகளை தடுத்து நிறுத்தும் 100000 தலைக்கவசம் வாங்க முடிவு

வீரர்கள் சுயபாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை இந்திய இராணுவம் மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக உயிர்காக்கும் தளவாடங்கள் பெறப்பட்டு வருகின்றன.தற்போது ஏகே-47 குண்டுகளை தடுத்து நிறுத்தக்கூடிய 100,000 தலைக்கவசங்களை இந்திய இராணுவம் வாங்க உள்ளது.

இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தலைக்கவச தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து தகவல்களை இராணுவம் கேட்டுள்ளது.

இதற்கான பட்ஜெட் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை எனினும் சுமார் 500கோடிகள் செலவில் இந்த தலைக்கவசங்கள் பெறப்படலாம்.இந்த தலைக்கவசங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ள பட்கா தலைக்கவசங்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும்.

இந்த புதிய கவசங்களில் இரவுநேரம் பார்க்கும் கண்ணாடி,டார்ச் ஆகியவை பொருத்திக்கொள்ளலாம்.பயங்கரவாதிகள் தற்போது சாதாரண குண்டுகளுக்கு பதிலாக கவசத்தை துளைக்கும் ஸ்டீல் புல்லட்டுகளை உபயோகிக்க தொடங்கியுள்ளனர்.

எனவே வீரர்களின் சுயபாதுகாப்பு கருவிகளையும் நவீனமாக்க வேண்டும்.