அணு ஆயுதங்கள் பாதுகாப்பை அளிக்கும், போரை தடுக்கும் : வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் !!
1 min read

அணு ஆயுதங்கள் பாதுகாப்பை அளிக்கும், போரை தடுக்கும் : வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் !!

கொரிய போர் முடிவு பெற்றதின் 67ஆவது ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு நிகழ்வில் பங்கேற்று ராணுவ வீரர்களை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கவுரவித்து பேசினார்.

அப்போது வடகொரியாவின் அணு ஆயுதங்கள் தங்களது நாட்டிற்கு பாதுகாப்பு அரண் எனவும் கொரிய தீபகற்ப பகுதியில் மற்றொரு போரை தடுக்கும் கருவி எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா தொடர்ந்து வட கொரியா அணு ஆயுத திட்டங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது, மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோர் மூன்று முறை சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1950 முதல் 1953 வரை சோவியத் ஒன்றியம் மற்றும் சீன ஆதரவுடன் வட கொரிய படைகளும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் மற்றும் தென் கொரிய படைகள் மூன்றாண்டுகள் மோதி கொண்டன.

இப்போரில் சுமார் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர்,இரு தரப்பிலும் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் தரை மட்டமாக்கப்பட்டன, போரின் முடிவில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டதே தவிர அமைதி ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில்லை.

ஆகவே இன்று வரை வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் போரில் உள்ளன என்பது கூடுதல் தகவல்.