சீன எல்லையில் இனி படைக்குறைப்பு இல்லை: இராணுவம் திட்டவட்டம்
1 min read

சீன எல்லையில் இனி படைக்குறைப்பு இல்லை: இராணுவம் திட்டவட்டம்

எல்லையில் படைக்குறைப்பிலோ அல்லது பின்வாங்குதலிலோ எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இந்திய நீண்ட கால விளைவுகளுக்காக தன்னை தயார் படுத்தி கொண்டுள்ளது.

சீன எல்லையில் படைக்குவிப்பை நிறுத்தி அவர்களுக்கு உதவியாக சீன எல்லைக்குள் பெரிய படைப்பிரிவுகளை நிறுத்தியுள்ளது.சண்டை ஏற்படுமாயின் இந்த மேலதிக பெரிய படைப்பிரிவுகள் வெறும் 48மணி நேரத்தில் எல்லைக்கு வந்துவிட முடியும்.

இதை சமாளிக்க இந்தியாவும் மேலும் மூன்று டிவிசன் படைப்பிரிவுகளை லடாக்கிற்கு நகர்த்தியுள்ளது.ஜீலை 14ல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் பெரிய அளவில் பின்வாங்குதல் நடைபெறவில்லை அல்லது எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் குறித்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

பிபி17ஏ பகுதியில் 1கிமீ தொலைவிலேயே இருநாட்டு வீரர்களும் நிற்கின்றனர்.பங்கோங் பகுதியில் பிங்கர் 4ல் இருந்து நகர்ந்து பிங்கர் 5 பகுதிக்கு சீனப்படைகள் நகர்ந்திருந்தாலும் இன்னும் பிங்கர் 4 மலைமுகடு பகுதியை ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றனர்.இங்கு சீனப்படைகள் கட்டுமானங்களையும் எழுப்பியுள்ளனர்.

டெஸ்பங் பகுதியிலும் இந்திய இராணுவம் எப்போதும் ரோந்து செல்லும் பகுதிகளுக்கு ரோந்து செல்ல விடாமல் சீனப்படையினர் தடுத்துள்ளனர்.இனி குளிர்காலம் வர உள்ளது.இந்த நேரத்தில் வீரர்களின் இருப்பை இரட்டிப்பாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வீரர்களுக்கு சப்ளை செய்வது மிக சவாலான பணியாக இருக்கும்.