
இந்திய விமானப்படைக்கு சுகோய்57 அல்லது எஃப்35 விமானங்கள் தேவையில்லை எனவும் இந்தியாவின் சொந்த தயாரிப்பான ஆம்கா போர் விமானமே போதும் என்ற கருத்தை இந்திய கட்டுரையாளர் நீலம் மேத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
அதிலும் ஆம்கா விமானத்திற்கு தற்போது பிரிட்டிஷ் என்ஜின் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அது சுமார் 11 டன்கள் உந்து சக்தியை மட்டுமே வெளியிடுகிறது, ஆகவே ஒரு புது வகையான என்ஜினை தயாரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதே கருத்தை இந்தியாவுக்கான ஏர்பஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் குப்தா தெரிவித்துள்ளார், பிரிட்டனிடம் இதற்கான தொழில்நுட்ப உதவியை பெறலாம் என தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை தளபதியும் ஆம்கா விமானங்களை கொண்ட 6 படையணிகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டு முதல் ஆம்கா விமானம் பறக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், 2036ஆம் ஆண்டு ஆம்கா மார்க்2 விமானம் வெளிவரும் என கூறப்படுகிறது.
இந்திய ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை தலைவர் ஆர். சோபோரி பேசுகையில் ஆம்கா விமானம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்றுள்ளார்.