காலிஸ்தான் பிரிவினைக்கான வாக்கெடுப்பை நடத்த அனுமதி மறுத்த கனேடிய அரசு: இந்திய மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் வரவேற்பு !!

  • Tamil Defense
  • July 26, 2020
  • Comments Off on காலிஸ்தான் பிரிவினைக்கான வாக்கெடுப்பை நடத்த அனுமதி மறுத்த கனேடிய அரசு: இந்திய மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் வரவேற்பு !!

அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கி வரும் “சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்” எனும் அமைப்பு வருகிற நவம்பர் மாதம் காலிஸ்தான் பிரிவினைக்கான வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டு இருந்தது.

இந்த நிலையில் கனேடிய அரசு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை ஆகியவற்றை மிகவும் மதிப்பதாகவும், இதற்கு எதிரான எந்தவித செயல்பாட்டையும் கனேடிய அரசு அனுமதிக்காது எனவும் கூறி உள்ளது.

கனேடிய அரசின் இந்த முடிவிற்கு இந்திய அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது, மேலும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆதரவு தெரிவித்து இந்திய தேசத்தை துண்டாட முடியாது என கூறியுள்ளார்.

பல்வேறு பஞ்சாப் தலைவர்கள் இதற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.