கிழக்கு லடாக் பகுதியில் இருந்து வெளியேறாத சீனா-இந்தியா குற்றச்சாட்டு

  • Tamil Defense
  • July 31, 2020
  • Comments Off on கிழக்கு லடாக் பகுதியில் இருந்து வெளியேறாத சீனா-இந்தியா குற்றச்சாட்டு

இருநாடுகளும் படைகளை விலக்கிகொண்டுள்ளதாக சீனா செய்தி வெளியிட்ட இரு நாட்களுக்கு பிறகு இந்தியா சீனாவின் கருத்தை மறுத்துள்ளது.

ஏற்கனவே சீனா களநிலை குறித்து பேசியிருந்தது.களநிலை சரியாகி வருவதாக கூறியிருந்தது.சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் பின்வாங்குவதல் இன்னும் முழுமையடையவில்லை என இந்தியா மறுத்துள்ளது.

இரு நாட்டு இராணுவ கமாண்டர்களும் விரைவில் அடுத்த கட்ட கள சந்திப்பு நிகழ்த்த உள்ளனர்.அப்போது முழுமையான படைவிலக்கம் குறித்து விவாதிக்கப்படும் என வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஸ்ரீவத்சவா அவர்கள் கூறியுள்ளார்.