
மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்தியாவில் இனி போக்குவரத்து துறையில் சீன நிறுவனங்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படாது என கூறியுள்ளார்.
போக்குவரத்து கட்டுமான ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது கூட்டு ஒத்துழைப்பு வழியாகவோ பங்கேற்க அனுமதி அளிக்கபடாது எனவும் இதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் எனவும் கூறினார்.
மேலும் பேசுகையில் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிறு குறு நடுத்தர தொழில்களில் சீன நிறுவனங்களை முடக்கி இந்திய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்.
அதிலும் இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தளர்வுகள் அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.