
இந்திய விமானப்படையின் 17ஆவது படையணி தங்க அம்புகள் ஆகும், (No 17, Golden Arrows Squadron).
இந்த படையணி இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையகத்தின் கீழ் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து இயங்கும்.
இந்த தளம் ஹரியானா மாநிலத்தில் உள்ளது, பாகிஸ்தான் எல்லையில் இருந்து மிக மிக அருகில் உள்ளது.
இந்த படையணி போர் காலங்களில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது, 1961 கோவா விடுதலை போரில் போர்த்துகீசியர்கள் இடமிருந்து கோவாவை மீட்பதில் மிக முக்கிய பங்கு வகித்தது.
பின்னர் 1971 வங்காளதேச விடுதலை போரின் போது, தரைப்படையின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய உதவியாக இருந்துள்ளது.
பின்னர் கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது மலை முகடுகளில் இருந்த பாகிஸ்தான் நிலைகளை தகர்த்து வெற்றிக்கு இப்படையணி மிகப்பெரிய பங்களிப்பு செய்தது.
அந்த சமயத்தில் இப்படையணியின் கட்டளை அதிகாரியாக முன்னாள் விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.