
வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவில் காலிஸ்தான் இயக்கங்களை உயிர்ப்பித்து பிரிவினைவாதத்தை தூண்ட 9 பேரின் பெயர்ப்பட்டியல் மத்திய அரசின் பார்வையில் இருந்தது.
இவர்கள் காலிஸ்தான் இயக்கங்களை உயிர்ப்பிப்பதற்கு உதவியதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டு
உள்ளனர்.
அவர்களின் பெயர்கள்:
1) வாந்தவா சிங் பப்பார், பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் பப்பார் கால்ஸா இண்டர்நேஷனல் அமைப்பின் தலைவர்.
2) லக்பீர் சிங்,
பாகிஸ்தானை தளமாக கொண்ட சர்வதேச சீக்கிய இளைஞர்கள் கூட்டமைப்பு.
3) ரஞ்சித் சிங்,
பாகிஸ்தனை தளமாக கொண்ட காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் தலைவன்
4) பரம்ஜீத் சிங்,
பாகிஸ்தானை தளமாக கொண்ட காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவன்
5) பூபிந்தர் சிங் பின்டா,
ஜெர்மனியில் உள்ள இவன் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் முக்கிய உறுப்பினர்.
6) குர்மித் சிங் பாக்கா,
இவனும் ஜெர்மனியில் வசிக்கும் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் முக்கிய உறுப்பினர் ஆவான்.
7) குர்பந்த்வந்த சிங் பன்னுன், அமெரிக்காவில் வாழும் இவன் நீதிக்கான சீக்கியர்கள் எனும் குழுவின் முக்கிய உறுப்பினர் ஆவான்.
8) ஹர்தீப் சிங் நிஜ்ஜார்,
கனடாவில் வாழும் இவன் காலிஸ்தான் புலிகள் படையின் தலைவன் ஆவான்.
9) பரம்ஜீத் சிங், இங்கிலாந்தில் வாழும் இவன் அங்குள்ள பப்பார் கால்ஸா இண்டர்நேஷனல் அமைப்பின் தலைவன் ஆவான்.