
இந்திய விமானப்படைக்கு தற்போது 10 ரஃபேல் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
இவற்றில் 5 நேற்றைய தினம் இந்தியா வந்த நிலையில் மீதமுள்ள 5 விமானங்கள் ஃபிரான்ஸில் இந்திய விமானிகளின் பயிற்சிக்கு வேண்டி உள்ளன.
இந்த 5 விமானங்களும் இந்த வருட இறுதியில் இந்தியா வரும் எனவும், அவை மேற்கு வங்காள மாநிலம் ஹஸிமாரா படைதளத்தில் நிலைநிறுத்த பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஹஸிமாரா படைத்தளம் சீன எல்லையை கண்காணிக்கும் மிக மிக முக்கியமான படைத்தளம் ஆகும், இந்தியாவின் கிழக்கு எல்லைகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் மிக முக்கியமான தளம்,
மேலும் இந்த தளம் இந்தியா, பூட்டான் மற்றும் சீன ஆக்கிரமிப்பு திபெத் ஆகியவற்றின் எல்லைகள் சங்கமிக்கும் சும்பி பள்ளதாக்குக்கு மிக அருகாமையில் உள்ள தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாலா மற்றும் ஹஸிமாரா தளங்களை ரஃபேல் போர் விமானங்களை நிலை நிறுத்த இந்திய விமானப்படை சுமார் 400 கோடி செலவிட்டு தயார் செய்துள்ளது, இந்த பணத்தில் நிறுத்துமிடங்கள், பராமரிப்பு வசதிகள் ஆகியவற்றை நிர்மானித்துள்ளது.
அம்பாலா படைத்தளத்தில் உள்ள ரஃபேல் படையணியான 17ஆவது தங்க அம்புகள் படையணிக்கு அடுத்த 5 ரஃபேல் விமானங்கள் 2021ஆம் ஆண்டிலும், மீதமுள்ள 8 விமானங்களும் 2022ஆம் ஆண்டு வாக்கிலும் கிடைத்து படையணி முழுமை பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.