விமானப்படைக்காக புதிய ஸ்மார்ட் வான்தள தகர்ப்பு குண்டுகள் வாங்க திட்டம்
1 min read

விமானப்படைக்காக புதிய ஸ்மார்ட் வான்தள தகர்ப்பு குண்டுகள் வாங்க திட்டம்

இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்காக உள்நாட்டு தயாரிப்பு ஸ்மார்ட் விமானதள தகர்ப்பு குண்டுகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சுமார் 500 என்ற அளவில் இந்த குண்டுகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் டிஆர்டிஓ Smart Anti Airfield Weapon (SAAW) என்ற குண்டை மேம்படுத்தி வருகிறது.100கிமீ சென்று தாக்கும் வல்லமை பெற்ற இந்த குண்டை கடந்த 2018ல் டிஆர்டிஓ சோதனை செய்தது.

120கிகி எடையுடைய இந்த குண்டு விமான ஓடுதளம்,பங்கர்கள்,விமான ஹேங்கர்கள் மற்றும் மற்ற கடினமான கட்டுமானங்களை தகர்த்து அழிக்க கூடியது.ஜாகுவார் மற்றும் சுகாய் விமானத்தில் இருந்து இந்த குண்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை எட்டு முறை இந்த குண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் டிஆர்டிஓ விரைவில் இதன் தயாரிப்பை தொடங்கும்.