புதிய ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளை சமாளிக்க வழிதேடும் அமெரிக்கா !!

  • Tamil Defense
  • July 20, 2020
  • Comments Off on புதிய ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளை சமாளிக்க வழிதேடும் அமெரிக்கா !!

அமெரிக்கா எதிர்கால வான் பாதுகாப்பு சவால்களை மனதில் வைத்துக்கொண்டு அவற்றை சமாளிக்கும் வகையிலான அதிநவீன வானூர்திகளை உருவாக்க கடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

எதிர்காலத்தில் தனது வான் பரப்பில் வானூர்திகளை நுழைய விடாத வகையிலான மிக கடுமையான எதிர்ப்பை கொடுக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளதாக பெண்டகன் கருதுகிறது.

ரஷ்யாவின் புதிய 2எஸ்38 டெரிவாட்ஸியா மற்றும் பான்ட்ஸிர் ஆகிய ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் ஹெலிகாப்டர்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா இவற்றை சமாளிக்க கூடிய திறன் கொண்ட அதிநவீன ஹெலிகாப்டர்களை உருவாக்க நினைக்கிறது.

இந்த புதிய ஹெலிகாப்டர்கள் அதிக வேகம், ஸ்டெல்த், அதிநவீன கட்டுபாட்டு அமைப்பு, லாவகமாக இயங்கும் திறன் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.