ஜூலை 29 இந்தியா வரும் 5 ரஃபேல் போர் விமானங்கள் !!

  • Tamil Defense
  • July 20, 2020
  • Comments Off on ஜூலை 29 இந்தியா வரும் 5 ரஃபேல் போர் விமானங்கள் !!

ஜூலை 29ஆம் தேதி இந்திய விமானப்படைக்கான 36 ரஃபேல் போர் விமானங்களில் முதல் 5 இந்தியா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் மூன்று இரட்டை இருக்கை (RAFALE DH) மற்றும் 2 ஒற்றை இருக்கை (RAFALE EH) ஆகிய விமானங்கள் இந்தியா வரவுள்ளன.

இவை இந்திய விமானப்படையின் 17ஆவது படையணியில் (NO17 GOLDEN ARROWS SQN) இணைய உள்ளன. இந்த படையணி ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன பிரச்சினை போய் கொண்டு இருக்கும் நிலையில் இந்த வரவு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.