தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான தரவு பாதுகாப்பு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் : மத்திய சட்ட அமைச்சர் !!

  • Tamil Defense
  • July 20, 2020
  • Comments Off on தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான தரவு பாதுகாப்பு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் : மத்திய சட்ட அமைச்சர் !!

மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் மத்திய அரசு விரைவில் தகவல் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர உள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் ஒவ்வொரு இந்திய குடிமகனுடைய தகவல் தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது, விவசாயம், வங்கி, தகவல் தொழில்நுட்பம் என ஒவ்வொருவரின் தகவலும் பல இடங்களில் சேமிக்கப்படுகிறது. இதனை பாதுகாப்பது இன்றியமையாதது என்றார்.

இந்த சட்டத்தை இயற்றி செயல்பாட்டில் கொண்டு வரும் பணியை ஒரு பாராளுமன்ற குழு மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் இச்சட்டம் குறித்த வரைவு அறிகாகை தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது தகவல் பாதுகாப்பு திருட்டு தொடர்பான வழக்குகள் தகவல் தொழிஙசட்டம் 2000த்தின் கீழ் உள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள் 2011றின் படி தான் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.