
இந்திய கடற்படை இரு விமானந்தாங்கி கப்பல்களை இயக்குவதில் குறியாக உள்ளது. இதில் கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா கப்பல் இந்திய கடற்படையில் ஒரு அங்கமாக இணைக்கப்பட்டது.
மேலும் ஐ.என்.எஸ். விக்ராந்த் கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டு வருகிறது.
ஆகவே எதிர்காலத்தில் மிக்29 விமானங்கள் ஒய்வு பெறுகையில் புதிய விமானங்களை படையில் சேர்க்க விரும்புகிறது.
இதற்காக 57 புதிய போர் விமானங்களுக்கான தேடலில் தற்போது ஃப்ரெஞ்சு ரஃபேல் எம் மற்றும் அமெரிக்க போயிங் எஃப்18 ஆகியவை களத்தில் உள்ளன.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு வாக்கில் இந்திய கடற்படைக்கு நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரிக்கும் இரட்டை என்ஜின் போர் விமானத்திற்கும் வாய்ப்பு கொடுக்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன.