தேஜசில் புதிய அதிநவீன ரேடார்; தாக்கும் திறன் அதிகரிப்பு
இந்திய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஹால் நிறுவனம் தான் தேஜஸ் விமானங்களை தயாரித்து வருகிறது.தற்போது தேஜஸ் விமானத்தில் புதிய ELTA’s ELM-2052 Airborne AESA Fire Control Radar (FCR) ரேடாரை பொருத்தி சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஜாகுவார் விமானத்தின் டரின் 3 அப்கிரேடுகளுக்காக இந்த ரேடார் பெறப்பட்டாலும் தற்போது புதிய தேஜஸ் விமானத்தில் இந்த ரேடார் இணைத்து சோதனை செய்யப்பட உள்ளது.
தேஜஸ் Mk1A வரும் 2023க்குள் தயாராகிவிடும் என ஹால் நிறுவனம் கூறியுள்ளது.மார்க்1ஏ-யில் பயன்படுத்தப்பட உள்ள புதிய தொழில்நுட்பங்களை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள இரு தேஜஸ் விமானங்கள் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.ஒரு விமானத்தில் ELTA’s ELM-2052 AESA FCR, Dual-Rack Pylons, ஜாமர் மற்றும் புதிய ஸ்மார்ட் மல்டிபன்க்சன் டிஸ்பிளே ஆகியவை பொருத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது.
புதிய 83 மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க்1ஏ இந்த வருட இறுதியில் ஆர்டர் செய்யப்பட உள்ளது.தேஜஸ் விமானம் கண்ணுக்கு எட்டியதற்கும் அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் வண்ணம் மேம்படுத்தப்பட்டுள்ளது.அதற்காக அஸ்திரா மார்க்1, விம்மெல் R-73 மற்றும்Derby-ER ஆகிய ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன.