இந்தியா மற்றும் பூட்டான் இடையே புதிய பொருளாதார வழித்தடம் அமைப்பு !!

  • Tamil Defense
  • July 17, 2020
  • Comments Off on இந்தியா மற்றும் பூட்டான் இடையே புதிய பொருளாதார வழித்தடம் அமைப்பு !!

இந்தியா மற்றும் பூட்டான் இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கு வங்காள மாநிலம் ஜெய்கோன் பகுதியை பூட்டானுடைய அஹ்லய் மற்றும் பஸாகா பகுதிகளை இணைக்கும் பாதை திறக்கப்பட்டுள்ளது.

பூட்டானுக்கான இந்திய தூதர் ருச்சிரா கம்போஜ் இதுகுறித்து பேசுகையில் இந்த புதிய பாதை இருநாடுகளுக்கும் இடையிலான சிறப்புமிக்க உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்றார்.

மேலும் பூட்டான் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பகுதியில் ஒரு சுங்க இலாகா அலுவலகம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தியா பூட்டானுடைய மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற வர்த்தகம் 9000 கோடிகளை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.