
ஏர்மார்சல் விவேக் ராம் சௌதாரி மேற்கு விமானப்படை கட்டளையகத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.லடாக் எல்லையில் சீனாவுடனான பிரச்சனை நீடித்து வரும் வேளையில் இந்த புதிய மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போது அவர் கிழக்கு கட்டளையகத்தின் சீனியர் ஏர் ஸ்டாஃப் அதிகாரியாக உள்ளார்.வரும் ஆகஸ்டு 1 அன்று பதவியேற்க உள்ளார்.
நேற்று தான் விமானப்படை கமாண்டர்களின் சந்திப்பும் முடிவுற்றது.விமானப்படையின் எதிர்காலம் குறித்து இந்த சந்திப்பில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
எல்லையில் ரோந்து பணிகளையும் விமானப்படை அதிகப்படுத்தியுள்ளது.சுகாய்,மிராஜ்,ஜாகுவார் மற்றும் மிக்-29 என முன்னனி போர்விமானங்கள் எல்லைக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
ஏர்மார்சல் சௌதாரி தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்றவர் ஆவார்.மிக்-21,மிக்-23 ,மிக்-29 மற்றும் சுகாய் ஆகிய விமானங்களில் பறந்த அனுபவம் கொண்டவர் ஆவார்.