ஜப்பானின் புதிய மேம்படுத்தப்பட்ட சூப்பர்சோனிக் கப்பல் தகர்ப்பு ஏவுகணை குறித்து வெளியான ஆச்சரிய தகவல்கள்

ஜப்பான் சொந்தமாக தயாரித்துள்ள சூப்பர்சானிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான ASM-3ஐ உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது.இந்த மேம்படுத்தப்பட்ட ஏவுகணை ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் மிர்சுபிஷி கனரக தொழிற்சாலை பயணத்தின் போது வெளியிடப்பட்டுள்ளது.

ASM-3 நீண்ட தூரம் உள்ள இலக்குகளை தாக்கும் வானில் இருந்து போர்க்கப்பல்கள் நோக்கி ஏவப்படக்கூடிய சூப்பர்சோனிக் ஏவுகணை ஆகும்.ஜப்பான் விமானப்படையின் F-2 பலபணி போர்விமானங்களில் வைத்து இந்த ஏவுகணையை ஏவ முடியும்.

active / passive radar composite seeker தொழில்நுட்பத்தால் வழிகாட்டப்பட்டு ஏவுகணை மிகத்துல்லியமாக இலக்கை தாக்க மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஏவுகணை இலக்கை நோக்கி செல்லும் போதே எலக்ட்ரானிக் போர்முறை அமைப்புகள் மூலம் ஏவுகணை பாதிக்கப்படாத வண்ணம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

15 முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.367மில்லியன் டாலர்கள் செலவில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

400கிமீ வரை உள்ள இலக்குகளை தாக்கும் அளவிற்கு இந்த ஏவுகணை அப்கிரேடு செய்யப்பட்டுள்ளது.