சீனாவிடம் இருந்து வாங்கிய 6 விமானங்களை பயன்படுத்த முடியாத நிலையில் நேபாளம் !!

  • Tamil Defense
  • July 16, 2020
  • Comments Off on சீனாவிடம் இருந்து வாங்கிய 6 விமானங்களை பயன்படுத்த முடியாத நிலையில் நேபாளம் !!

நேபாள அரசு சீனாவிடம் சில விமானங்களை தனது நாட்டிற்கு பரிசாக அளிக்கும் படி நிர்பந்தம் செய்து வந்த நிலையில் சீனா முதலில் சில விமானங்களை வாங்கினால் பிறகு பரிசளிக்கலாம் என தெரிவித்தது.

இதனை அடுத்து நேபாள அரசு சீன விமானங்களை வாங்க முடிவு செய்து ஆய்வு குழு ஒன்றை சீனாவுக்கு அனுப்பி உள்ளது.

அங்கு சீனா தனது 56 இருக்கைகள் கொண்ட MA60 மற்றும் 17 இருக்கைகள் கொண்ட Y12R ஆகிய விமானங்களை காண்பித்தது, இவற்றை வாங்க நேபாள அதிகாரிகள் ஒப்பு கொண்டனர்.

ஆனால் அதே நேரத்தில் அங்கு ஆய்வுக்கு வந்த வங்காளதேச ஆய்வு குழு இந்த விமானங்களை நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2014ஆம் வருடம் 2 MA60 ரக விமானங்கள் மற்றும் 4 Y12 இ விமானங்கள் நேபாளம் வந்தன, பின்னர் இரு வகைகளிலும் தலா ஒரு விமானம் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விமானங்களை திறம்பட கையாள விமானிகள் இல்லாமலும், லாபம் வராத நிலையிலும் இந்த விமானங்களை நிறுத்தி வைக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நேபாள விமான போக்குவரத்து வாரியத்தின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில் இந்த விமானங்கள் நேபாளத்திற்கு ஏற்றவை அல்ல ஆனால் கமிஷன் காரணமாக இந்த விமானங்கள் வலுக்கட்டாயமாக வாங்கப்பட்டதாக கூறினார்.