37 இந்திய ராணுவ விமான தளங்களுக்கு வழிகாட்டி அமைப்புகளை வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ள ஸ்பெயின் நிறுவனம் !!

  • Tamil Defense
  • July 4, 2020
  • Comments Off on 37 இந்திய ராணுவ விமான தளங்களுக்கு வழிகாட்டி அமைப்புகளை வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ள ஸ்பெயின் நிறுவனம் !!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நிறுவனம் இந்த்ரா , இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வழிகாட்டி அமைப்புகளை வழங்க மேற்குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதைய அரசால் தொடங்கப்பட்ட (Modernization of Air Field Infrastructure – MAFI) விமான தளங்கள் நவீனப்படுத்துதல் திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும். ஏற்கனவே முதல் கட்டத்தில் இந்திய விமானப்படையின் 30 தளங்களுக்கு வழிகாட்டி அமைப்புகளை இந்த்ரா நிறுவனம் வழங்கியது.

தற்போது இரண்டாம் கட்டத்தில் இந்திய விமானப்படை, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றின் 37 தளங்களுக்கு வழிகாட்டி கருவிகளை வழங்க உள்ளது. இந்த கருவிகள் அனைத்துமே டாடா பவர் நிறுவனம் வழியாக தயாரித்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த்ரா நிறுவனத்தின் தயாரிப்புகள் உலக சந்தையில் மிகவும் நம்பகத்தன்மை மற்றும் அதிக தரம் கொண்டவையாக பார்க்கப்படுகின்றன காரணம் உலகம் முழுவதும் சுமார் 1400 விமான நிலையங்களில் இந்நிறுவன தயாரிப்புகள் தான் விமானங்களை வழிகாட்ட பயன்படுகின்றன.

இந்தியாவிலும் இந்நிறுவன தயாரிப்புகள் விமான போக்குவரத்திலும் பயணிகள் பாதுகாப்பிலும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.

இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய கட்டுபாட்டு மையங்களிலும் இந்நிறுவனத்தின் கருவிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் நாட்டின் 80% வான்வெளி இந்த நிறுவனத்தின் ரேடார்களால் தான் சிவிலியின் விமான போக்குவரத்திற்காக கண்காணிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.