
இந்திய சீன எல்லைப்பிரச்சனைகள் எல்லைச்சாலை கட்டுமானங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபித்துவிட்டன.தற்போது எல்லைச் சாலைகள் அமைப்பான பிஆர்ஓ-வின் கீழ் வரும் சாலைகளை பராமரிக்க ஏற்கனவே உள்ள பராமரிப்பு செலவை 30 கோடியில் இருந்து 120 கோடியாக அதிகரித்துள்ளது மத்திய அரசு.
படைகளை உடனடியாக எல்லைக்கு நகர்த்த இந்த சாலைகள் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
முன்னனியில் உள்ள படைகளுக்கு சப்ளை செய்யவும் இந்த சாலைகள் இன்றியமையாததாக உள்ளது.
எல்லை மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.லடாக்கில் ஏற்கனவே சாலைப் பணிகளுக்காக 72 கோடிகள் ஒதுக்கப்பட்டு தற்போது 589 கோடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
BRO தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வந்தாலும் அதற்கு நிநி மத்திய சாலை அமைச்சகம் தான் ஒதுக்குகிறது.
சீன ஊடுருவலுக்கு முன்னரே எல்லைச் சாலைகள் கட்டுமானம் நடைபெற்று வந்தாலும் தற்போதைய நிலையில் அது இன்னும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.