
கூடிய விரைவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே ஆகியோர் இருதரப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ளனர்.
அனேகமாக இந்த சந்திப்பு அக்டோபர் மாதம் வீடியோ கான்ஃபரன்சிங் வழியாக நிகழும் என கூறப்படுகிறது.
இந்த இருதரப்பு கூட்டத்தொடரில் இந்தியா ஜப்பான் இடையே ராணுவ தளங்கள் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது, இது சீனாவுக்கு செக் வைக்கும் நடவடிக்கை ஆகும்.
மேலும் ஃபிலிப்பைன்ஸ் அரசுடனும் இத்தகைய இருதரப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.