38900 கோடியில் தளவாடங்கள் வாங்க அனுமதி- என்னெல்லாம் வாங்க போகிறோம்?

  • Tamil Defense
  • July 3, 2020
  • Comments Off on 38900 கோடியில் தளவாடங்கள் வாங்க அனுமதி- என்னெல்லாம் வாங்க போகிறோம்?

முப்படைகளுக்கு தேவையான தளவாடங்கள் வாங்க நடைபெற்ற இராணுவ கொள்முதல் கூட்டத்தில் சுமார் 38900 கோடியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் 31130 கோடிகளுக்கு இந்திய தயாரிப்பு தளவாடங்களே வாங்கப்பட உள்ளன.தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்று தயாரித்தல் உட்பட 80% இந்தியப் பங்கு உள்ள தளவாடங்கள் பெறப்பட உள்ளன.

பினாகா பலகுழல் ஏவுகணைக்கான எரிகணைகள், பிஎம்பி புதுப்பித்தல், இராணுவத்திற்காக Software Defined Radios, நெடுந்தூரம் செல்லும் தரை தாக்கும் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் அஸ்திரா ஏவுகணைகள்.

1000கிமீ தொலைவில் உள்ள தரை இலக்குகளை தாக்கும் க்ரூஸ் ஏவுகணைகள் பெறப்பட உள்ளன.இவை கடற்படை மற்றும் விமானப்படைக்காக பெறப்படுகிறது.ஏற்கனவே படையில் உள்ள பினாகா ரெஜிமென்டுகள் மற்றும் மேலதிக புதிய ரெஜிமென்டுகளுக்கான மேலதிக பினாகா ராக்கெட்டுகள் பெறப்பட உள்ளன.100கிமீ தொலைவில் உள்ள வான் இலக்குளை அழிக்க விமான்படை மற்றும் கப்பல் படைக்கு அஸ்திரா ஏவுகணைகள் உதவும்.இது இந்தியத் தயாரிப்பு ஆகும்.