2034ல் ஒய்வு பெறும் மிக்29கே, மாற்றாக 2032ல் கடற்படையில் இணையும் டெட்பஃப் விமானம் !!!

  • Tamil Defense
  • July 15, 2020
  • Comments Off on 2034ல் ஒய்வு பெறும் மிக்29கே, மாற்றாக 2032ல் கடற்படையில் இணையும் டெட்பஃப் விமானம் !!!

தற்போது இந்திய கடற்படை தற்போது ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலை இயக்கி வருகிறது மேலும் வருகிற 2022ஆம் ஆண்டு உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் படையில் இணைய உள்ள நிலையில் விமானங்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது.

தற்போது இந்திய கடற்படை 45 ரஷ்ய மிக்29 கே ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது.
மேலும் இவை வருகிற 2034ஆம் ஆண்டு ஒய்வு பெறும் நிலையில் உள்ளன.

ஆகவே நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ள டெட்பஃப் போர் விமானத்தை 2032ஆம் ஆண்டு வாக்கிலேயே படையில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானம் ரஃபேல் விமானத்தின் கடற்படை ரகத்திற்கு இணையானதாகும்.

மேலும் ஏற்கனவே இந்திய கடற்படைக்கு 57 போர் விமானங்களை வாங்குவதற்கான போட்டியில் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தனது எஃப்18 போர் விமானங்களை தர தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.